மாநிலங்களவை தேர்தல் - மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் : புதுச்சேரி மாநிலங்களவை தொகுதியில் பா.ஜ.க. போட்டி

Sep 22 2021 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். நாளை வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும்.

நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்‍கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். புதுச்சேரியில் காலியாக உள்ள மாநிலங்களை இடத்துக்கு யாரை வேட்பாளரை நிறுத்துவது என்பது குறித்து பா.ஜ.க. மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள், தனித்தனியே ஆலோசனை கூட்டங்களை நடத்தின. தொடர்ந்து இழுப்பறி நீடித்து வந்த சூழலில், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்‍கு, முன்னாள் நியமன சட்டமன்ற உறுப்பினர் திரு.செல்வகணபதியை வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்தது.

இதையடுத்து, அம்மாநில முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான திரு.என். ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்ற திரு. செல்வகணபதி, தன்னை வேட்பாளராக அறிவித்தற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார். திரு.செல்வகணபதி இன்று பிற்பகலில் வேட்புமனு தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00