நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைப்பு - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

Jul 24 2021 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடப்பு கல்வியாண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் 2 பருவங்களாக பிரித்து செயல்படுத்தப்படும் என சி.பி.எஸ்.இ. தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்களும் இரண்டாக பிரிக்கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு பருவத்திற்கும் பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண்கள் 50 சதவீதமாக பிரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள், மதிப்பெண்கள் பிரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்த விவரங்களை www.cbscacademic.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00