கொரோனா குறைந்து வருவதால் படிப்படியாக பள்ளிகளை திறக்‍கலாம் - மத்திய அரசுக்‍கு எய்ம்ஸ் இயக்‍குனர் பரிந்துரை

Jul 24 2021 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் படிப்படியாக பள்ளிகளை திறக்‍கலாம் என்று எய்ம்ஸ் இயக்‍குனர் டாக்‍டர் ரந்தீப் குலேரியா மத்திய அரசுக்‍கு பரிந்துரை செய்துள்ளார்.

கொரோனா முதல் அலையின்போது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை முழுமையாக திறக்‍கப்படவில்லை. முதல் அலை ஓய்ந்தபோது, உயர் வகுப்பு மாணவர்களுக்‍கு மட்டும் பள்ளிகள் திறக்‍கப்பட்ட நிலையில், இரண்டால் அலை தொடங்கியவுடன் மீண்டும் மூடப்பட்டன. ஆன்லைனில் மட்டுமே தற்போது மாணவர்களுக்‍கு பாடம் எடுக்‍கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சரியான கண்காணிப்புடன், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்‍கலாம் என மத்திய அரசுக்‍கு எய்ம்ஸ் இயக்‍குனர் டாக்‍டர் ரந்தீப் குலேரியா பரிந்துரை செய்துள்ளார். பள்ளிகளில் மாணவர்கள் நேரடியாக பாடம் கற்பது முக்‍கியமானது எனத் தெரிவித்துள்ள அவர், ஒரு மாணவரின் தனிப்பட்ட குணத்தையும், பழக்‍க வழக்‍கங்களையும் அது தீர்மானிப்பதாகவும் குலேரியாக கூறியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00