ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா பரிசீலனையில் மட்டுமே உள்ளது - இறுதி செய்யப்படவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்‍கம்

Jul 24 2021 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா பரிசீலனையில் மட்டுமே உள்ளதாகவும், இறுதி செய்யப்படவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒளிப்பதிவு சட்டம் 1952-ல் மத்திய அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. இதன் மூலம், ஏற்கனவே சென்சார் அனுமதி பெற்ற படத்தின் சான்றிதழில் மாற்றங்கள் செய்ய முடியும். தேவைப்பட்டால் அந்தச் சான்றிதழை ரத்து செய்யவும் முடியும். இதன் மூலம், திரைத்துறையில் சென்சார் போர்டு, நீதிமன்றம் என்ற இரண்டையும் தாண்டி அதிகபட்ச அதிகாரத்தை மத்திய அரசு பெற முடியும் எனக்‍ கூறப்படுகிறது. இதனால், திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து நாடாளுமன்ற மக்‍களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்‍கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா ஆலோசனை அளவில் மட்டுமே இருப்பதாகவும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00