ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் தொடரும் கனமழை : நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்கள் வெளியேற்றம்

Jul 24 2021 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் Siricilla மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். குடியிருப்பு பகுதிகளும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே Kumuram Bheem, Jagtial, Warangal உள்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேப் போன்று ஆந்திராவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடாகவில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. கனமழையால் வேகமாக நிரம்பி வரும் முக்கிய அணைகளில் இருந்து தண்ணீர் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00