திருப்பதி கோயிலை டுரோன் தாக்குதலில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை : DRDO தயாரித்துள்ள டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பொருத்த தேவஸ்தானம் முடிவு

Jul 24 2021 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி கோயிலை டுரோன் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், DRDO தயாரித்துள்ள டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஜம்மு விமான படை தளத்தில் டுரோன் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகளை டிஆர்டிஓ வேகப்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, அந்த தொழில்நுட்ப செயல் விளக்க கூட்டம், கர்நாடகாவில் நடைபெற்றது. இதில் முப்படை அதிகாரிகள், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் பாதுகாப்பு துறை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, அந்த டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை வாங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அத்துமீறி வரும் டுரோன்களை கண்டுபிடித்து, அதனை தடுத்து நிறுத்தி அழிக்கும் வகையில், டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ தயாரித்து உள்ளது. அமைப்பின் விலை தற்போது 25 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த தொழில்நுட்பத்தை வாங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00