மத்திய அமைச்சரிடம் இருந்து அறிக்கையை பறித்து கிழித்தெறிந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. - நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட்

Jul 23 2021 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அமைச்சரிடம் இருந்து அறிக்கையை பறித்து கிழித்தெறிந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. திரு. சாந்தனு சென், நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் மாநிலங்களவை நடவடிக்கையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பெகாசஸ் ஒட்டுக்‍கேட்பு மென்பொருள் தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவையில் நேற்று அறிக்‍கையை வாசிக்‍க எழுந்தார். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. திரு. சாந்தனு சென் திடீரென அமைச்சர் கையில் இருந்த அறிக்கையை பறித்து கிழித்து வீசி எறிந்தார். இதனால் அமைச்சர் தனது அறிக்கையை படிக்க முடியாமல், அதன் நகலை சபையில் தாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று மாநிலங்களவை கூடியதும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. திரு. சாந்தனுவை அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேசிய மாநிலங்களவை தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு, மழைக்‍கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள் முழுவதும் திரு. சாந்தனு சென், அவை நடவடிக்‍கைகளில் பங்கேற்க கூடாது எனத் தெரிவித்து, அவரை சஸ்பெண்ட் செய்தார். நேற்று நடந்த சம்பவம் இதுவரை அவையில் நடக்‍காத மோசமான சம்பவம் என்றும், நமது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இழுக்கானது என்றும் திரு. வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00