பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் சித்து - அதிருப்தியாளரும், முதலமைச்சருமான அமரீந்தர் சிங்கை பஞ்சாப் பவனில் நேரில் சந்தித்தார்

Jul 23 2021 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர், தனது நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் திரு. அமரீந்தர் சிங்கை திரு. சித்து நேரில் சந்தித்தார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக திரு. சித்து நியமனம் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் திரு. அமரீந்தர் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனக்‍கு எதிராக பஞ்சாப் காங்கிரசில் திரு. சித்து. உட்கட்சி பூசலை உருவாக்‍குவதாக குற்றம்சாட்டினார். இதனால் திரு. அமரீந்தர் சிங்குக்‍கும், திரு. சித்துவுக்‍கும் மோதல் உச்சத்தை எட்டியது. இதனிடையே, பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக தான் பதவியேற்கும் நிகழ்ச்சிக்‍கு வருகை தர முதலமைச்சர் திரு. அமரீந்தர் சிங்கிற்கும் சித்து அழைப்பு விடுத்தார். தமக்‍கு 65 எம்.எல்.ஏக்‍கள் ஆதரவு இருப்பதை தெரியப்படுத்தும் வகையில் அவர்களின் கையெழுத்துடன் பதவியேற்பு விழா அழைப்பிதழை திரு.அமரீந்தர் சிங்கிற்கு சித்து அனுப்பி வைத்தார். இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக இன்று பதவியேற்கும் திரு. சித்து, பஞ்சாப் பவனில், முதலமைச்சர் திரு. அமரீந்தர் சிங்கை நேரில் சந்தித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00