கடந்த ஏப்ரல், மே மாதங்களில், 645 குழந்தைகள், கொரேனா பெருந்தொற்றுக்கு பெற்றோரை இழந்துள்ளன - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Jul 23 2021 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த ஏப்ரல், மே மாதங்களில், 645 குழந்தைகள், கொரேனா பெருந்தொற்றுக்கு தங்களது பெற்றோரை இழந்துள்ளதாக அமைச்சர் திருமதி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். அதில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கோவிட் பெருந்தொற்றுக்கு தங்களது பெற்றோரை இழந்துள்ளனர் என்றும், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 158 குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆந்திராவில் 119 குழந்தைகளும், மகாராஷ்டிரத்தில் 83 குழந்தைகளும், மத்திய பிரதேசத்தில் 73 குழந்தைகளும் தங்கள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள் என சுட்டிக்‍காட்டியுள்ளார். பெற்றோரை இழந்த இந்த குழந்தைகள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என, சம்பந்தப்பட்ட மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் எங்கள் அமைச்சகத்தையும், கல்வி அமைச்சகத்தையும் கேட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00