டெல்லி அரசியலில் புயலை கிளப்பியுள்ள செல்போன் ஒட்டுக்‍கேட்பு விவகாரம் --- மக்களவையில் அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதிக்‍க காங்கிரஸ் நோட்டீஸ்

Jul 23 2021 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றத்தில் மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரில், கொரோனா இறப்புகள், பெகாசஸ் செல்ஃபோன் ஒட்டுகேட்பு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, புதிய வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்‍கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்ற நடவடிக்‍கைகள் முடங்கியுள்ளன. குறிப்பாக, பெகாசஸ் செல்ஃபோன் உரையாடல் ஒட்டுகேட்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில், மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆலோசனைக்‍ கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00