சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு பணம் ரூ.20,700 கோடி - சுவிட்சர்லாந்து தேசிய வங்கியின் அறிக்கையில் தகவல்

Jun 18 2021 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுவிஸ் வங்கிகளில் 20 ஆயிரத்து 700 கோடி ரூபாயை இந்தியர்கள் சேமித்து வைத்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்களின் சுரங்கமாக திகழ்கின்றன. இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளது குறித்து கடந்த ஆண்டிற்கான நிதி சார்ந்த வருடாந்திர தரவுகளை, சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டது. அதில், கடந்த ஆண்டு நிலவரப்படி, நிதிப் பத்திரங்கள், சேமிப்புத் தொகை என 20 ஆயிரத்து 706 கோடி ரூபாயை இந்தியா்கள் சேமிப்பாக வைத்துள்ளனா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா்களும், இந்திய நிறுவனங்களும் வைத்துள்ள சேமிப்புத் தொகை சுமார் 4 ஆயிரம் கோடியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்தாண்டில் பணத்தைச் சேமிக்காமல் நிதிப் பத்திரங்களாகச் சேமித்து வைப்பது அதிகரித்துள்ளதாக சுவிட்சா்லாந்து தேசிய வங்கி தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா்களின் சேமிப்பானது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக சுவிட்சா்லாந்து தேசிய வங்கி தெரிவித்துள்ளது. இந்தியர்கள், பங்கு பத்திரங்கள், சேமிப்பு பத்திரங்கள் போன்றவற்றின் மூலம் மேற்கொண்ட முதலீட்டின் மதிப்பு உயர்ந்ததே இதற்கு காரணம் ஆகும். ஆனால், இந்தியா்கள் கருப்புப் பணமாக எவ்வளவு தொகையை சேமித்து வைத்துள்ளனா் என்ற விவரங்கள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00