ஓட்டுநர் உரிமம் உட்பட மோட்டார் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - வழக்குப்பதிவோ, அபராதமோ விதிக்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தல்

Jun 18 2021 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் உட்பட மோட்டார் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை செப்டம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அரசு அலுவலகங்கள் 50 சதவீதத்துக்கும் குறைவான ஊழியர்களுடனே செயல்படுகின்றன. இதனால், ஆவணங்களை புதுப்பித்தல் போன்ற செயல்பாடுகள் தவிர்க்கப்படுகின்றன. இதுபோன்ற சூழலில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலாவதியான ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்று வைத்திருப்பதற்காக பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ், வாகனத் தர சான்றிதழ், வாகனங்களுக்கான அனுமதி சான்றிதழ், வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட தேதிக்கு பிறகு காலாவதியாகிய வாகனச் சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்தல், அபராதம் விதித்தல் போன்ற எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00