டீசல் விலை உயர்வைக்‍ கண்டித்து வரும் 28-ம் தேதி, லாரிகள் வேலை நிறுத்தம் - அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவிப்பு

Jun 18 2021 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

டீசல் விலை உயர்வைக்‍ கண்டித்து, வரும் 28ம் தேதி, லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவித்துள்ளது.

நாட்டில் கிடுகிடுவென உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்‍கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், டீசல் விலை உயர்வைக்‍ கண்டித்து, வரும் 28ம் தேதி, லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் குல்தரங் சிங் அத்வால் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், டீசல் விலை உயர்வால், போக்குவரத்து துறை சார்ந்தோர் வாழ்வாதாரம் இழந்துள்ளதோடு, விலைவாசி உயர்வால் மக்‍கள் கஷ்டப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை, ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வந்து நாடு முழுதும் ஒரே விலையையும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விலை மாற்றத்தையும் மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் - வாகன கடன் தவணைக்கு, ஆறு மாத அவகாசம் வழங்க வேண்டும் - உள்ளிட்ட கோரிக்‍கைகளை பிரதமர் மற்றும் மத்திய - மாநில போக்குவரத்து துறை அமைச்சர்களிடம் வரும் 28-ம் தேதி வழங்க உள்ளதாகவும் அந்த அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00