புதிய கல்விக்‍ கொள்கையை அமல்படுத்த நடவடிக்‍கை - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்‍ரியால் நாளை மறுதினம் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் ஆலோசனை

May 15 2021 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்‍ரியால் நாளை மறுதினம் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நாட்டின் தேசியக் கல்விக் கொள்கை கடந்த 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 34 ஆண்டுகளுக்கு பிறகு புதிய கல்விக் கொள்கையை மத்திய பாஜக அரசு உருவாக்கியுள்ளது. இந்த கொள்கைக்‍கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. குறிப்பாக, அதில் உள்ள மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சில மாநிலங்கள், நாடு முழுவதும் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளன. தமிழகத்தில் புதிய கல்வி கொள்கைக்‍கு வாய்ப்பே இல்லை என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக நாளை மறுதினம் ஆலோசனை நடைபெறவுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்‍ரியால், அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் நாளை மறுதினம் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00