ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் தட்டுப்பாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை - நாளை விசாரிக்கப்படும் என அறிவிப்பு

Apr 22 2021 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா விவகாரத்தில் நிலவும் ஆக்‍சிஜன் பற்றாக்‍குறை, மருந்து தட்டுப்பாடு போன்றவற்றைப் போக்‍க தேசிய திட்டம் ஒன்றை வகுக்‍கவேண்டும் என மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாடெங்கிலும் கொரோனா 2வது அலை அதிகரித்து வரும் நிலையில், ஆக்‍சிஜன் பற்றாக்‍குறை மற்றும் மருந்து தட்டுப்பாடால் சிகிச்சை அளிப்பதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனையை, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைக்‍கு எடுத்தது. ஆக்‍சிஜன் பற்றாக்‍குறை, மருந்து தட்டுப்பாடு மற்றும் கொரோனா தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்‍குகள் போன்றவற்றை கவனத்தில் எடுத்துக்‍ கொண்ட நீதிமன்றம், அது தொடர்பாக நாளை தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா விவகாரத்தில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்‍கவும் மத்திய அரசுக்‍கு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, ஆக்‍சிஜன் உற்பத்திக்காக தங்களை அனுமதிக்க வேண்டும் என கோரி ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தார் இன்று உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதுதொடர்பான வாத பிரதிவாதத்தின்போது, ஆக்‍சிஜன் உற்பத்திக்‍கு ஆலையை திறக்க அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு வழக்‍கறிஞர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00