மேற்கு வங்க சட்டசபையில் இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு - 43 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

Apr 22 2021 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்கத்தில் இன்று நடைபெற்று வரும் 6-ம் கட்ட தேர்தலில், கொரோனா அச்சத்திற்கு இடையேயும் மக்‍கள் காலை முதலே வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்‍களித்து வருகின்றனர்.

294 தொகுதிகளைக்‍ கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்‍கு 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 5 கட்டங்களாக 180 தொகுதிகளுக்‍கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று 6-ம் கட்டமாக 43 தொகுதிகளுக்‍கு தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மக்‍கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் 306 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4-ம் கட்ட தேர்தலின்போது நடந்த வன்முறை மற்றும் துப்பாக்‍கிச்சூடு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்த நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க இன்றைய தேர்தலில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, மீதமுள்ள தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி விடுத்த கோரிக்‍கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. மேற்குவங்கத்தில், வரும் 26 மற்றும் 29-ம் தேதிகளில் மீதமுள்ள 2 கட்ட வாக்குப்பதிவுகளும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00