நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பும்போது ஏற்பட்ட கசிவு - ஆக்‍சிஜன் பற்றாக்‍குறையால் வெண்டிலேட்டரில் இருந்த 24 பேர் பலி

Apr 21 2021 7:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்ட்ரா மாநிலம் நாஷிக்கில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, கொரோனா நோயாளிகள் 24 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்ட்ரா, டெல்லி உள்பட பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு விரைவாக தீர்க்கப்படும் என பிரதமர் திரு.நரேந்திர மோடி நேற்று உறுதி அளித்தார். இந்த நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலம் நாஷிக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கிலிருந்து சிலிண்டர்களில் நிரப்பும்போது, வால்வில் கசிவு ஏற்பட்டு அதிகளவில் ஆக்சிஜன் வீணாக வெளியேறியது.

இதனால் மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இந்த ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக வென்டிலேட்டரில் இருந்த 24 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00