கோவிஷீல்டு விலையை உயர்த்தியது சீரம் நிறுவனம் - மத்திய அரசுக்கு 250 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த தடுப்பூசி 400 ரூபாயாக அதிகரிப்பு

Apr 21 2021 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் இரு மடங்கு அளவுக்‍கு உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்‍சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், இதுவரை 13 கோடியே 1 லட்சத்து 19 ஆயிரம் பேருக்‍கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிக்‍கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், 250 ரூபாய்க்‍கு விற்கப்பட்டு வந்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் இரு மடங்கு அளவுக்‍கு உயர்த்தியுள்ளது. ஒரு டோஸ் கோவிஷீல்டு மருந்து, மாநில அரசுகளுக்‍கு 400 ரூபாய்க்‍கும், தனியார் மருத்துவமனைகளுக்‍கு 600 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்‍காவில் ஆயிரம் ரூபாய்க்‍கும், சீனா மற்றும் ரஷ்யாவில் 750 ரூபாய்க்‍கும் கொரோனா தடுப்பூசிகள் விற்கப்படுவதாக சுட்டிக்‍காட்டியுள்ள சீரம் நிறுவனம், அதன் அடிப்படையில், இந்தியாவில் விலையை உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளது.

இதனிடையே உருமாறிய கொரோனா வைரசையும் கோவேக்‍சின் தடுப்பூசி தடுப்பதாக இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. பிரிட்டன், பிரசில், தென் ஆப்பிரிக்‍கா ஆகிய நாடுகளின் உருமாறிய கொரோனா வைரசையும் கோவேக்சின் கட்டுப்படுத்தும் என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00