கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டம் - 2ம் நாளாக இன்றும் நீடிப்பதால் பேருந்து போக்குவரத்து பாதிப்பு

Apr 8 2021 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரிக்‍கையை வலியுறுத்தி, அரசு போக்‍குவரத்து ஊழியர்கள் நடத்திவரும் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது. அரசு பேருந்துகள் இயங்காததால் ப‌யணிகள் கடும் அவதிக்‍கு ஆளாகியுள்ளனர்.

கர்நாடகாவில் அரசு போக்‍குவரத்து ஊழியர்கள், 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி, தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், தங்களை அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு டிசம்பரில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்து கழக ஊழியர்களை நேரடியாக அரசு ஊழியர்களாக மாற்றம் செய்யும் கோரிக்கையை தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக சமாதானம் செய்த கர்நாடக அரசு, இதுவரை நடவடிக்‍கை எடுக்‍கவில்லை.

இந்நிலையில், தங்களது கோரிக்‍கைகளை உடனடியாக நிறைவேற்றக்‍கோரி கர்நாடக அரசு போக்‍குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். சில தொழிலாளர்கள் மட்டும் பணிக்கு வந்தனர். போராட்டத்திற்கு தங்கள் ஆதரவு உள்ளதாகவும், ஆனால் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்‍க பணிக்‍கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மீது எஸ்மா உள்ளிட்ட சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.

செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00