மகாராஷ்டிரத்தில் புதிதாக 59 ஆயிரத்து 907 பேருக்கு கொரோனா வைரஸ் : கொரோனா பாதிப்பால் 322 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு
Apr 8 2021 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரத்தில் புதிதாக 59 ஆயிரத்து 907 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 59 ஆயிரத்து 907 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 31 லட்சத்து 73 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30 ஆயிரத்து 296 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 322 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 56 ஆயிரத்து 652 ஆக உயர்ந்துள்ளது.