அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா பரவலால் பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் தீவிரம் : பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 30ம் தேதி வரை, இரவு நேர ஊரடங்கு

Apr 8 2021 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால், மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவில் பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மகாராஷ்ட்ரா, டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் ஒரேநாளில் 6 ஆயிரத்து 976 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் இன்று முதல் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நிகழ்ச்சி அரங்குகள் உள்ளிட்டவற்றை தற்காலிகமாக மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 30ம் தேதி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளதால், சத்தீஸ்கர்-மத்தியபிரதேசம் இடையே வரும் 15-ம் தேதி வரை, பேருந்து சேவை ரத்து செய்யப்படுவதாக மத்தியபிரதேச அரசு அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் இன்று இரவு ஒன்பது மணி முதல் ஏப்ரல் 16ம் தேதி காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர்புறப் பகுதிகளில் மட்டும் இந்த ஊரடங்கும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கான்பூர் நகரில் 30ம் தேதிவரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வாரனாசியில் ஒரு வாரத்துக்கு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00