இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தும் திறன் சீனாவுக்கு உள்ளது : இந்திய பாதுகாப்புப் படை தலைவர் பிபின் ராவத் தகவல்
Apr 8 2021 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தும் திறன் சீனாவுக்கு உள்ளதாக இந்திய பாதுகாப்புப் படை தலைவர் திரு.பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புப் படை தலைவரும், முப்படைகளின் தளபதியுமான திரு.பிபின் ராவத், விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையில் இணைய கருந்தரங்கில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், இந்தியா மற்றும் சீனா இடையே, சைபர் துறையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளதாகவும் இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தும் திறன் சீனாவுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். சீனாவுடன் நம்மால் முழுமையாக போட்டிப்போட முடியாமால் இருக்கலாம். அதற்காகவே பல மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துகொள்ள இந்தியா முயற்சிப்பதாக தெரிவித்த அவர், இதன் மூலம் சமாதான நேரங்களில் அவர்களிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவை பெற முடியும் என்பதை நாம் பார்த்துவருகிறோம் என்று பேசினார்.
மாற்று வழிகளின் மூலம் சைபர் தாக்குதல்களை முறியடிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். சைபர் தாக்குதல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான முயற்சிகளில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் திரு.பிபின் ராவத் தெரிவித்தார்.