விவசாயிகள் போராட்ட டூல் கிட்டை பகிர்ந்தது தொடர்பான வழக்கு - வழக்கறிஞர் நிகிதா மற்றும் சாந்தனுவை வரும் 15-ம் தேதி வரை கைது செய்யத் தடை

Mar 9 2021 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுவது தொடர்பான டூல் கிட் ஆவணத்தை பகிர்ந்தது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிகிதா மற்றும் சாந்தனுவை வரும் 15-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, ஸ்வீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான க்ரேடா தன்பெர்க் பதிவிட்டிருந்தார். இந்த டூல் கிட்டை பகிர்ந்ததற்காக பெங்களூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா ரவி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளி வந்துள்ளார். இவ்வழக்கில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்கறிஞரான நிகிதா மற்றும் பொறியாளர் சாந்தனுவுக்கு, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இருவரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றனர். இருவரின் முன் ஜாமினும் நிறைவடைய உள்ளதால், மீண்டும் முன் ஜாமின் கோரி, டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி திரு.தர்மேந்தர் ராணா, இருவரையும் வரும் 15-ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00