விவசாயிகள் பெயரில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் - மத்திய வேளாண் அமைச்சர் வேண்டுகோள்

Nov 28 2020 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
விவசாயிகள் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய பா.ஜ.க., அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியை நோக்கி படையெடுத்த விவசாயிகளால், டெல்லி - ஹரியானா எல்லையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள புராரி என்ற இடத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்த பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், வரும் 3-ம் தேதி பேச்சுவார்த்தைக்காக விவசாய சங்கங்களை அழைத்துள்ளதாகவும், இதில், விவசாயிகள் பங்கேற்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு தயாராக இருப்பதாகக் கூறிய அவர், விவசாயிகள் பெயரில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00