ஒடிசாவில் 5 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் : சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

Nov 27 2020 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில், 5 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைத்து முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில், 5 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, உயிரிழந்த சிறுமியின் பெற்றோர், ஒடிசா தலைமை செயலகம் முன்பு அண்மையில் தற்கொலைக்கு முயன்றனர். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியை, மாநில வேளாண் துறை அமைச்சர் திரு. அருண் குமார் சாகு பாதுகாப்பதாக, பா.ஜ.க., - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இன்று, ஒடிசா சட்டப்பேரவைக் கூடியதும் இந்த விவகாரத்‌தை கையிலெடுத்த எதிர்க்கட்சிகள், அமைச்சர் திரு. அருண் குமார் சாகு பதவி விலகக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சட்டப்பேரவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. இந்த சம்பவம் குறித்து பேசிய முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக், சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து அறிக்கை அளிக்கும் என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00