கொரோனாவுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக உள்ளது : ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தகவல்

Nov 27 2020 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பாதிப்புக்குப் பிறகு, எதிர்பார்த்ததை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி பரிவர்த்தனை டீலர்கள் கூட்டமைப்பு நடத்திய ஆண்டு கூட்டத்தில் பேசிய திரு. சக்திகாந்த தாஸ், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சியைச் சந்தித்ததாகவும், இதுவரை கண்டிராத வகையில் மைனஸ் 23.9 சதவீதமாக இருந்ததாகவும் கூறினார். கொரோனா பொது முடக்கத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து, பொருளாதார வளர்ச்சி, எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே உள்ளதாகவும், மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி வலுவான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். பண்டிகை காலத்தையொட்டி தேவையின் வேகம் மிக அதிகமாக காணப்பட்டதாகவும், பண்டிகை காலத்துக்குப் பிறகும் தேவையின் வேகமானது தொடர்ந்து நீடித்த நிலையில் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00