நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்ட கடல் சீற்றம் : மீனவ கிராமத்தில் கடலரிப்பு ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம்

Nov 27 2020 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தினால், புதுச்சேரி அருகே பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு, 10க்‍கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

புதுச்சேரி அருகே தமிழக பகுதியான பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் அவ்வப்போது கடல் சீற்றம் ஏற்பட்டு வீடுகள் சேதமடைவது வழக்‍கம். இந்நிலையில், நிவர் புயல் நேற்று அதிகாலை கரையை கடந்தபோது, கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. அப்போது கடல் அலைகள் 18 அடி முதல் 20 அடி உயரத்திற்கு மேலே எழும்பின. இந்த கடல் சீற்றம் காரணமாக கடற்கரை ஓரத்தில் இருந்த 10க்‍கும் மேற்பட்ட வீடுகள் கடல் அரிப்பால் இடிந்து விழுந்தன. அதுமட்டுமின்றி, கடல் நீரும் கிராமத்திற்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்‍கள் அச்சமடைந்தனர். கடல் அரிப்பு காரணமாக நேற்று முன்தினமும் சில வீடுகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00