இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் உரிமைகளை பாதுகாக்க ஐ.நா. வலியுறுத்தல் - CAA, FCRA, "உபா" சட்டங்கள், உரிமைகளை தடுக்கவே பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு

Oct 21 2020 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் உள்ள மனித உர்மை ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் உரிமைகளை பாதுகாக்குமாறும், மத்திய அரசிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. CAA, FCRA, "உபா" ஆகிய சட்டங்கள், உரிமைகளை தடுக்கவே பயன்படுத்தப்படுவதாகவும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விமர்சித்துள்ளது.

ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையரான "மீச்செல் பேட்ச்எலெட்" வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித உரிமைக்காக செயல்படும் தன்னார்வ நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்தி, அவற்றின் செயல்பாடுகள் முடக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு, தன்னார்வ நிறுவனங்களை தடுக்க, தெளிவற்ற சட்டங்கள் பயன்படுத்தப்படுவதாக, "F.C.R.A." எனப்படும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை குறிப்பிட்டுள்ளார். தெளிவற்ற சட்டங்கள் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்காக போராடிய மனித உரிமை ஆர்வலர்களுக்கு அளிக்கப்படும் அழுத்தம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள மீச்செல், அவ்வாறு போராடிய பலர் , "உபா" சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த சட்டம், சர்வதேச மனித உரிமை தரத்திற்கு உட்படாதது எனக் குறிப்பிட்டுள்ள அவர், "பீமா குரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள "ஸ்டான் ஸ்வாமி", அவரது மோசமான உடல்நிலையிலும், இந்த சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். கருத்து சுதந்திரம், தங்களது உரிமைகளை பயன்படுத்தியதற்காக யாரையும் கைது செய்யவில்லை என இந்திய அரசு உறுதியளிக்க வேண்டுமெனவும், "மீச்செல் பேட்ச்எலெட்" தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00