கொரோனா குறித்து பொதுமக்‍களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை - பண்டிகைக்‍ காலத்தில் மிகுந்த கவனம் தேவை என பிரதமர் மோதி வலியுறுத்தல்

Oct 21 2020 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா முற்றிலும் ஒழிந்து விட்டதாக யாரும் கருத வேண்டாம் என்றும், பண்டிகைக் ‍காலம் என்பதால் பொதுமக்‍கள் கூடுதல் கவனத்துடன் இருக்‍க வேண்டும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோதி கேட்டுக்‍கொண்டுள்ளார்.

கொரோனா காலத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோதி 7-வது முறையாக நாட்டு மக்‍களிடையே உரையாற்றினார். அப்போது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டு மக்‍கள் வெளியே வந்துள்ள நிலையில், கொரோனா தொடர்ந்து நீடிப்பதால் கவனத்துடன் இருக்‍க வேண்டுமென கேட்டுக்‍கொண்டார். கொரோனா பாதிப்பிலிருந்து ஆயிரக்‍கணக்‍கான மக்‍களை காப்பாற்றியிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், பொருளாதார நிலைமை மெல்ல மெல்ல முன்னேறி வருவதாகவும்‍ பல நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு எனவும் தெரிவித்தார். நாட்டு மக்‍களிடையே கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை - கொரோனா குறித்து பொதுமக்‍கள் அலட்சியத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் கொரோனா முற்றிலும் ஒழிந்துவிட்டதாக யாரும் கருத வேண்டாம் என்றும் தெரிவித்தார். கொரோனா போரில் இறுதி வெற்றி அடையும் வரை அலட்சியம் வேண்டாம் என்றும், பண்டிகைக்‍காலம் என்பதால் பொதுமக்‍கள் கூடுதல் கவனத்துடன் இருக்‍கவேண்டும் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோதி கேட்டுக்‍கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00