இந்தியாவின் மற்றொரு பகுதியையும் சொந்தம் கொண்டாடும் நேபாளம் - எல்லையில் இருக்கும் குமாவன் பகுதியையும் பறிக்கும் செயலால் மீண்டும் சர்ச்சை

Aug 4 2020 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் மற்றொரு பகுதியையும் சொந்தம் கொண்டாடும் நேபாளம் மேயரின் பேச்சால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தியாவுக்குச் சொந்தமான லிபுலேக், கல்பானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளுக்கு சமீபத்தில் நேபாளம் உரிமை கொண்டாடியது. அதோடு, இந்தப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தையும் கடந்த மே மாதம் வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தியது. நேபாளத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒரு தலைபட்சமான நடவடிக்கை எனவும் வரலாற்று பூர்வமாக எந்த ஆதாரங்களும் இன்றி நேபாளம் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் நேபாள நாட்டின் பிம்துத் நகர் பலித்ராகாவின் மேயர் சுரேந்திர பிஷ்த், இந்திய - நேபாள எல்லையில் இருக்கும் சம்பாவத் மாவட்டத்தின் குமாவன் பகுதி நேபாளத்திற்கு சொந்தமானது என்றும், இருநாட்டு அதிகாரிகளும் கூட்டாக நில அளவை பணிகளில் ஈடுபட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00