விலங்குகளை விரட்ட வெடிபொருட்கள் பயன்படுத்துவதை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிக்கை - உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Jul 10 2020 2:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

விலங்குகளை விரட்ட வெடிபொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய வழக்கில், மத்திய அரசு மற்றும் தமிழகம், கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரளாவில் வெடிமருந்து வைக்கப்பட்ட தேங்காயை உண்ட யானை, வாயில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விலங்குகளை விரட்ட வெடிபொருட்களை பயன்படுத்துவது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவது, அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி, சுபம் அவஸ்தி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கும் சட்டத்தில், தேவையான திருத்தங்களை கொண்டுவரவும், வனவிலங்குகளின் தேவையைப் புரிந்து கொண்டு, அவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவும், மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு மற்றும் தமிழகம், கேரளா உள்ளிட்ட 13 மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00