தாஜ்மஹாலை தற்போது திறப்பதற்கு வாய்ப்பில்லை - கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் மத்திய அரசு முடிவு

Jul 6 2020 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆக்ராவில் கொரோனா காரணமாக தாஜ்மஹால் மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுலாத்தளங்கள், புராதான சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்பட்டன. தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் அனைத்து நினைவுச் சின்னங்களையும் திறக்கலாம் என, மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், ஆக்ராவில் கொரோனா காரணமாக உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. தாஜ்மஹால் தாஜ்கஞ்ச் என்ற காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டது, இது தற்போது ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ளது. ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால் போன்ற சுற்றுலா தலங்கள் தற்போது திறக்கப்பட்டால் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00