சீன ஊடுருவலுக்‍கு எதிராக குரல் எழுப்பும் லடாக்‍ மக்‍கள் - மத்திய அரசு புறக்‍கணிப்பதாக ராகுல் குற்றச்சாட்டு

Jul 4 2020 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

லடாக் பகுதியில் இந்தியப் படைகளின் வீரமிக்க எதிர்ப்பை ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்கொண்டதாக பிரதமர் தெரிவித்திருந்த நிலையில், லடாக் பகுதிகளை சீன படைகள் ஆகிரமித்துள்ளதாக, அந்தப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

லடாக் பகுதிக்கு திடீரென்று நேற்று சென்ற பிரதமர், அந்தப் பகுதியில் ஆகிரமிப்பாளர்களுக்கு இந்திய வீரர்கள் வீரமிக்க எதிர்ப்பை வெளிப்படுத்தி அவர்களை விரட்டியடித்ததாக தெரிவித்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,லடாக் பகுதியை சீன படைகள் ஆக்கிரமித்துள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிப்பதாகவும், தேச பற்றுடன் அவர்கள் தெரிவிக்‍கும் கருத்துகளை பிரதமர் மோடி கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். லடாக்‍ பகுதி மக்‍களின் எச்சரிக்‍கையை அலட்சியப்படுத்தினால், பெரும் எதிர் விளைவுகளை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்‍கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக ஊடகங்களில் வெளியான லடாக்‍ பகுதி மக்‍களின் பேட்டிகளையும் அவர் ட்விட்டரில் இணைத்துள்ளார்.

இதே கருத்தை வலியுறுத்தியுள்ள திருமதி பிரியங்கா காந்தி, லடாக் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீடியோவை இணைத்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். லடாக்‍ பகுதி மக்‍களின் எச்சரிக்‍கையை இந்திய அரசு ஏற்றுக்‍கொண்டு அதன்படி செயல்படும் என எதிர்பார்ப்பதாகவும் இந்த எதிர் நடவடிக்‍கைக்‍கு ஒட்டுமொத்த தேசமும் ஒன்றிணைந்து நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00