இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை ஜூலை 31 வ‌ரை திறக்க அனுமதி இல்லை - திரையரங்குகள், நீச்சல் குளம், பொழுது போக்கிற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் அறிவிப்பு

Jun 30 2020 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளை, ஜூலை மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு மற்றும் தளர்வை நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளும், குறைவான பகுதிகளில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது - ஆன்லைன், தொலைதூரக் கல்வி வகுப்புகள் நடத்தலாம்.

நாடு முழுவதும் விளையாட்டுப் பயிற்சி நிறுவனங்கள், கலாச்சார மற்றும் மத ரீதியான அமைப்புகள் திறக்க ஜூலை 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது - வந்தே பாரத் மிஷன் தவிர மற்ற வெளிநாட்டு விமான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது - சினிமா, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம், பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு மற்றும் பயிற்சி பகுதிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் - அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மத, கலாச்சார நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்க வேண்டும் - இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்க வேண்டும் - கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு முழு அளவில் பின்பற்றப்பட வேண்டும் - மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் சரக்கு போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை - புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே உள்ளபடி தொடரும்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் வேறுபல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் - அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

மாநிலங்களும், யூனியன் பிரதேச அரசுகளும் தேசிய பேரிடர் சட்டத்தின் இந்த விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் - விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டும் நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00