இந்தியா - சீனா இடையே அசாதாரண சூழல் : ஜூலை இறுதியில் இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள் - எந்த காலதாமதமும் ஏற்படாது - ஃபிரான்ஸ் ராணுவம் உறுதி

Jun 29 2020 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா-சீனா இடையே அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜூலை மாத இறுதியில், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 6 ரஃபேல் போர் விமானங்கள், இந்தியாவிடம் ஒப்படைக்‍கப்படும் என ஃபிரான்ஸ் ராணுவ அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

ஃபிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 36 அதிநவீன ரஃபேல் விமானங்களை வாங்க, கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 4 விமானங்கள், கடந்த மே மாத இறுதியில் இந்தியாவிடம் ஒப்படைக்‍கப்பட்டிருக்‍க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இருநாடுகளிலும் ஏற்பட்டுள்ள முடக்கம் மற்றும் நடைமுறை சிக்கல்களால், விமானங்களை ஒப்படைப்பதில் 2 மாதங்கள் தாமதமாகும் என ஏற்கனவே ஃபிரான்ஸ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஜூலை மாத இறுதியில், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 6 ரஃபேல் போர் விமானங்கள், அம்பாலா விமான தளத்தை வந்தடையும் என்றும், இதில் எந்த காலதாமதமும் ஏற்படாது என்றும் ஃபிரான்ஸ் ராணுவ அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. இந்தியா-சீனா இடையே அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ரஃபேல் போர் விமானம், இந்தியாவிற்கு பெரும் பலம் சேர்க்‍கும் என்றும், ரஃபேலுக்‍கு நிகரான போர் விமானம், சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00