பொது முடக்‍கத்தால் தொழில்துறை பெரும் பாதிப்பு - மத்திய அரசு மீது, தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் விமர்சனம்

Jun 4 2020 2:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனாவால் சரிவடைந்த பொருளாதாராத்தை மீட்டெடுக்‍க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை என பிரபல தொழிலாதிபர் திரு. ராஜீவ் பஜாஜ் குற்றம்சாட்டி உள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும், வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வது குறித்தும், சுகாதாரத்துறை மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் திரு. ராகுல்காந்தி தொடர்ச்சியாக உரையாடி வருகிறார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் திரு.அபிஜித் பானர்ஜி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் திரு.ரகுராம் ராஜன், தொற்றுநோய் இயல் நிபுணர் திரு. ஜோஹன் கீசெக், சுகாதார நிபுணர் ஆஷிஷ் ஜா, ஆகியோருடன், திரு.ராகுல் காந்தி ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பஜாஜ் நிறுவன நிர்வாக இயக்குநர் திரு.ராஜீவ் பஜாஜுடன், திரு.ராகுல் காந்தி உரையாடியுள்ளார். இந்த உரையாடலின் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்‍கையை கடுமையாக விமர்சித்துள்ள திரு. ராஜீவ் பாஜாஜ், மத்திய அரசின் நடவடிக்கைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். பொது முடக்‍கதால் கொரோனா தாக்கம் குறைவதற்கு பதிலாக உள்நாட்டு உற்பத்தியும் பொருளாதாரமும் தான் சரிந்து விட்டதாகவும் அதை மீட்டெடுக்‍க சிக்‍கல் இல்லாத உறுதியான திட்டத்தை பிரதமர் அறிவிக்‍க வேண்டும் என்றும் திரு.ராஜீவ் பஜாஜ், வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00