கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்‍கும் வரை பள்ளிகளை திறக்‍கக்‍கூடாது - பெற்றோர் சங்கங்கள் மத்திய அரசுக்‍கு கோரிக்‍கை

Jun 1 2020 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக ஒழியும் வரை பள்ளிகளை திறக்‍கக்‍கூடாது என நாடு முழுவதும் உள்ள பல்வேறு பெற்றோர் சங்கங்கள் மத்திய அரசுக்‍கு கோரிக்‍கை வைத்துள்ளன.

தேசிய ஊரடங்கில் தொடர்ந்து தளர்வுகள் அளிக்‍கப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து அடுத்த மாதம் முடிவெடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கு பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் சங்கங்கள் சார்பில், கொரோனா முற்றிலும் ஒழியும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று change.org என்ற இணையதளம் மூலம் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முற்றிலும் ஒழிவதற்கு முன்போ, அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்‍கப்படுவதற்கு முன்போ பள்ளிகளை திறப்பது மிக மோசமான திட்டம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகளை திறப்பதற்கு பதிலாக, ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00