பீமா குரேகான் கலவரம் - மும்பை அழைத்துச் செல்லப்பட்ட கவுதம் நவலேகா : என்.ஐ.ஏ.விற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம்

May 29 2020 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

பீமா கோரேகான் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவுதம் நவலேகாவை, அவசர அவசரமாக மும்பைக்கு, அழைத்துச் சென்றதற்கு டெல்லி உயர்நீதிமன்றம், தேசிய புலனாய்வு முகமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டஷ் ஆட்சியின்போது, புனே அருகில் பீமா கோரேகான் என்ற இடத்தில், மராட்டிய மன்னர் பேஷ்வா பாஜிராவ் படைகளை, ஆங்கிலேய படையிலிருந்த தாழ்த்தப்பட்டோர் படைப்பிரிவு விரட்டியடித்தது. இந்த வெற்றியை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் ஊர்வலம் நடைபெறும் நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இந்துத்துவா இயக்கத்தினர், ஊர்வலத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாகக் கூறி, சமூக செயற்பாட்டாளர் கவுதம் நவலேகா கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், தனக்கு 67 வயதாவதால், எளிதில் நோய்த்தொற்றால் பாதிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகக்கூறி, ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை, அவரை NIA அதிகாரிகள், டெல்லியில் இருந்து ரயில் மூலம் மும்பை அழைத்துச் சென்றனர். வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், அவரை அவசரம் அவசரமாக அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என நீதிபதி அனுப் பம்பானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00