2019-20-ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, 4 புள்ளி 2 சதவீதமாக வீழ்ச்சி - பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கையில் தகவல்

May 26 2020 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

2019-20-ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, 4 புள்ளி 2 சதவீதமாக குறைந்துள்ளதாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2019-20 நிதியாண்டின் கடைசி காலாண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி விவரங்களை, வரும் 29-ம் தேதி, தேசிய புள்ளி விவரங்களுக்கான ஆணையம் அறிவிக்கவுள்ளது. கடந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில், நாட்டின் ஜி.டி.பி., கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 4.7 சதவீதமாக குறைந்த நிலையில், கடைசி காலாண்டின் விகிதம் குறித்து, எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மார்ச் மாதத்தின் கடைசி 7 நாட்களில், 1 புள்ளி 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன்படி, கடைசி காலாண்டின் உள்நாட்டு உற்பத்தி, 1.2-சதவீதமாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-20-ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 4.2 சதவீதமாக இருக்குமென, இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21-ம் நிதியாண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி, பூஜ்யத்திற்கும் கீழ் குறைந்து மைனஸ் 6 புள்ளி 8-ஆக சரியும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 75 சதவீதத்தை கொண்டுள்ள 10 மாநிலங்களில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மொத்த இழப்பில், மகாராஷ்டிரா 15 புள்ளி 6 சதவீதத்தையும், தமிழ்நாடு 9 புள்ளி 4 சதவீதத்தையும் கொண்டுள்ளது.

மேலும், உம்பன் புயல் பாதிப்பு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையால் இந்த அறிக்கையில், ஒரு சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00