மஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்

May 24 2020 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிவுக்கு வராது என முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால், மஹாராஷ்டிர மாநிலம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மும்பையில் மட்டும், 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே, கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அடுத்த 15 நாட்கள் மிக முக்கியமானது என்றும், சுகாதாரத் துறையினருக்கு தேவையான அனை‌த்து உதவிகளையும் மாநில அரசு செய்யும் என்று உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.

விமான சேவை தொடங்குவது குறித்து பதிலளித்த அவர், விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால், மஹாராஷ்டிராவில் விமான சேவை தொடங்க, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் அவகாசம் கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வரும் 31-ம் தேதிக்குள், மஹாராஷ்டிராவில் பொது முடக்கம் முடிந்து விடும் என்று கூற முடியாது என்றும் முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00