வரும் 14ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்க அரசியல் மாநில அரசுகள் பரிந்துரைத்திருப்பதாக பிரதமர் மோதி தகவல் - கொரோனாவுக்கு எதிராக உலகம் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டிருப்பதாகவும் கருத்து

Apr 8 2020 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கை வரும் 14-ம் தேதிக்கு பிறகும் நீட்டிக்க வேண்டுமென மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தேசிய ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன், பிரதமர் திரு. மோதி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஊரடங்கை தளர்த்துவதா, நீட்டிப்பதா? கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள், அதிலிருந்து மீளும் வழிகள் போன்றவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்‍கப்பட்டது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து கட்சி தலைவர்களும் கொரோனா பரவலை தடுக்க ஆலோசனைகள் வழங்கினர் என்றும், ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலகமே, கடுமையான சவாலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், இந்த சூழல், மனித குல வரலாற்றையே மாற்றும் நிலையை ஏற்படுத்தியிருப்பதாகவும், சமூக நெருக்கடி நிலைக்கு இணையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு காலகட்டத்தை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், மற்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பிரதமர் திரு. மோதி வரும் 11-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் முறையில், மாநில முதலமைச்சர்காளுடன் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00