கொரோனா அச்சத்தால் நம்பிக்கை இழப்பு : இந்திய சந்தைகளிலிருந்து பணத்தை எடுக்‍கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

Apr 8 2020 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில், இந்திய சந்தைகளில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்‍கும் அதிகமான முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில், அந்நிய முதலீட்டாளர்கள், பங்குச் சந்தைகளிலிருந்து 61 ஆயிரத்து 973 கோடி ரூபாயையும், பத்திரங்கள் சந்தையில் இருந்து 56 ஆயிரத்து 211 கோடி ரூபாயையும் வெளியே எடுத்துள்ளனர்.

மொத்தத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய், அந்நிய முதலீட்டாளர்களால் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற முதல் இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும் உள்நாட்டு சந்தையிலிருந்து 6 ஆயிரத்து 735 கோடி ரூபாயை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எடுத்துள்ளனர். இதன் காரணமாக பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால், இந்தியாவின் முதல்நிலை பணக்காரர்கள் தங்களின் சொத்து மதிப்பை கணிசமாக இழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00