ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதி செய்யப்படும் என அறிவிப்பு வெளியானதன் எதிரொலி - அமெரிக்‍க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு பாராட்டு

Apr 8 2020 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதி விவகாரத்தில், இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்‍க அதிபர் ட்ரம்ப் திடீரென தற்போது பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சைக்‍கு தேவையான ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை அமெரிக்‍காவுக்‍கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்‍க பதிலடி கொடுக்‍கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்‍கு மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை, மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதுகுறித்து தனியார் தொலைக்‍காட்சி ஒன்றுக்‍கு பேட்டியளித்த ட்ரம்ப், இந்தியாவின் நடவடிக்கைக்‍கு பாராட்டு தெரிவித்தார். பிரதமர் திரு. மோதியுடன், நல்ல புரிதலுடனேயே தொலைபேசியில் உரையாடியதாகவும், உள்நாட்டு தேவையை கருத்தில்கொண்டே, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைக்கு இந்தியா தற்காலிக தடை விதித்ததை தாம் உணர்ந்து கொண்டதாகவும் கூறினார். இந்தியாவிலிருந்து அமெரிக்‍காவுக்‍கு தேவையான மாத்திரைகள் கிடைக்‍கும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00