Hydroxy Cloroquine மருந்து ஏற்றுமதி தடைக்‍கான விதிகளை கடுமையாக்கியது மத்திய அரசு - கொரோனா நோய்தடுப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை

Apr 6 2020 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

Hydroxy Cloroquine மருந்து ஏற்றுமதி தடைக்‍கான விதிகளை மத்திய அரசு கடுமையாக்கிவுள்ளது.

மலேரியா சிகிச்சைக்‍கு பயன்படும் Hydroxy Cloroquine மருந்து, கொரோனோவை கட்டுப்படுத்தும் என நிரூபிக்‍கப்படாத போதிலும், பாதிக்‍கப்பட்டவர்கள், அறிகுறிகள் உள்ளவர்கள் உள்ளிட்டோரின் சிகிச்சைக்‍கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

இதையடுத்து, Hydroxy Cloroquine மருந்து ஏற்றுமதிக்‍கு மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது. ஏற்றுமதிக்கு தடை விதிக்‍கப்படும் பொருட்களுக்‍கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த அலகுகள் மூலம் சிறப்பு விலக்‍கு அளிக்‍கப்படும். ஆனால், Hydroxy Cloroquine மருந்தை அவற்றின் மூலமும் ஏற்றுமதி செய்ய முடியாத அளவுக்கு விதிகளை, மத்திய அரசு கடுமையாக்கிவுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவுக்‍கு Hydroxy Cloroquine மாத்திரைகளை ஏற்றமதி செய்யக்‍கோரிய அதிபர் ட்ரம்பிடம், தம்மால் முயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் திரு. மோதி உறுதியளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00