கொரோனா வைரசின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல் முறையாக வெளியீடு - புனே தேசிய வைராலஜி ஆய்வு மையம் வெளியிட்டது

Mar 28 2020 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரசின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. புனேவில் செயல்படும் தேசிய வைராலஜி ஆய்வு மையத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்களால் இப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசால், முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழலை இந்தியா எதிர்கொண்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரிலிருந்து, கடந்த ஜனவரியில் இந்தியா திரும்பிய கேரள மாணவி ஒருவருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்தான், நாட்டிலேயே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட முதல் நபா். இவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து, அதிநவீன மின்னணு நுண்ணோக்கி மூலம் எடுக்‍கப்பட்ட கொரோனா வைரசின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மஹாராஷ்ட்ர மாநிலம் புனேவில் செயல்படும் தேசிய வைராலஜி ஆய்வு மையத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்களால் எடுக்‍கப்பட்டுள்ள இந்த புகைப்படங்களை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வைரஸானது, கடந்த 2012-ம் ஆண்டில் பரவிய 'மொ்ஸ்-சிஓவி' வைரஸ், கடந்த 2002-ல் பரவிய 'சாா்ஸ்-சிஓவி' வைரஸ் ஆகியவற்றின் தோற்றத்தை ஒத்திருப்பதாக தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00