வெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்‍கு திரும்புவதை தடுக்‍க வேண்டும் - மாநில அரசுகளுக்‍கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

Mar 28 2020 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

வெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள், கொரோனா அச்சம் காரணமாக, தங்களது சொந்த மாநிலங்களுக்‍கு திரும்புவதை தடுக்‍க வேண்டும் என மாநில அரசுகளுக்‍கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா சமூக பரவலை தடுக்‍க, கடந்த 24-ம்தேதி நள்ளிரவு முதல் வரும் 14-ம்தேதி வரை, 21 நாட்களுக்‍கு நாடு முழுவதும் ஊரடங்க அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளி மாநிலங்களுக்‍கு வேலைக்‍கு சென்ற தொழிலாளர்கள், அங்கேயே இருக்‍க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அத்யாவசிய தேவைகள் சரிவர கிடைக்‍காத காரணத்தால், அந்த தொழிலாளர்கள், நடை பயணமாகவே, தங்கள் சொந்த மாநிலங்களுக்‍கு திரும்பி வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்‍க மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ள சூழலில், சொந்த மாநிலங்களுக்‍கு திரும்பும் தொழிலாளர்களால் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், வெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்கள், கொரோனா அச்சம் காரணமாக, தங்களது சொந்த மாநிலங்களுக்‍கு திரும்புவதை தடுக்‍க வேண்டும் என மாநில அரசுகளுக்‍கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்‍கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்‍கு தேவையான உதவிகளை அந்தந்த மாநில அரசுகள் செய்துதர வேண்டும் என்றும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று, உணவகங்கள், பெண்கள் விடுதிகள் போன்றவற்றுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00