கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு - 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிவிப்பு

Mar 28 2020 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 873-ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கொரோனாவுக்‍கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

கேரளாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அம்மாநில முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் ஏற்கெனவே உறுதி செய்தார். இதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனா தொற்று உள்ளோர் எண்ணிக்கை 176-ஆக உயர்ந்தது. இந்நிலையில், கொச்சி மருத்துவமனையில் கொரோனாவுக்‍கு சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவர் இன்று உயிரிழந்தார். இது அம்மாநிலத்தில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாகும். இதேபோல், மஹராஷ்டிராவில் 156 பேரும், கர்நாடக மாநிலத்தில் 10 மாத குழந்தை உட்பட 64 பேரும், தெலங்கானா மாநிலத்தில் 59 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் 50 பேரும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 49 பேரும், குஜராத்தில் 47 பேரும், தமிழகத்தில் 38 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரானா வைரஸ் நோயிலிருந்து 76 பேர் குணம‌டைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை, 19 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 873-ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00