பிரதமர் நரேந்திர மோதியின் அறிவிப்பை தொடர்ந்து ஊரடங்கை அமல்படுத்தும் நடவடிக்‍கையில் நாடு முழுவதும் போலீசார் தீவிரம் - அறிவுரைகளை மீறுவோருக்‍கு எச்சரிக்‍கை

Mar 25 2020 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறைகளை மீறி சாலைகளில் பயணிப்பவர்களை எச்சரிக்‍கை விடுத்து அனுப்பி வைத்து வருகின்றனர்.

கொரோனா பரவல் வீரியத்தை தடுப்பதற்காக நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் பிரகடனப்படுத்தியுள்ளார். இதனை நடைமுறைப்படுத்தும் நடவடிக்‍கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்‍கள் கடைகளுக்‍கு வந்தனர். பொது இடங்கள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படும் நிலையிலும், ஒருசிலர் வீதிகளில் நடமாடுகின்றனர். போலீசார் ஆங்காங்கு தடுப்புகளை ஏற்படுத்தி விதிமுறைகளை மீறுவோருக்‍கு எச்சரிக்‍கை விடுத்து அனுப்பி வைக்‍கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநில எல்லைப் பகுதியில் தீவிர வாகன தணிக்‍கை நடைபெற்று வருகிறது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முக்‍கிய வாகனங்கள் மட்டும் அனுமதிக்‍கப்படுகிறது.

இதனிடையே, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் பரவாமல் தடுக்‍க மாநில அரசுகளுக்‍கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அமைதியை நிலைநாட்டி, மக்‍கள் நடமாட்டத்தை தடுக்‍கவும் ஆணை பிறப்பித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00