அமெரிக்‍க அதிபர் டிரம்பின் வருகையின்போது தீவிரவாத எதிர்ப்பு குறித்து பேச்சுவார்த்தை : இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ வர்தன் தகவல்

Feb 19 2020 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க அதிபர் திரு.​டோனல்ட் டிரம்பின் இந்திய வருகையின் போது, தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் திரு. ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்‍க அதிபர் டிரம்ப் வரும் 24, 25 தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரை வரவேற்க மத்திய அரசும், குஜராத் அரசும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் டிரம்ப்பின் இந்திய வருகையின் போது எரிசக்‍தி, பிராந்திய பிரச்னைகள், பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருநாடுகளுக்‍கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் திரு. ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர், அமெரிக்‍க அதிபரை வரவேற்று மதிய உணவு அளிக்‍க இருப்பதாகவும், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் Motera அரங்கத்தில் இருவரும் கலந்துரையாட உள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சி Houston- நகரில் நடைபெற்ற Howdi Modi என்ற நிகழ்ச்சிக்‍கு இணையாக இருக்‍கும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் திரு. ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00