டெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன? : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Feb 19 2020 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் காற்று மாசைக் குறைக்க, பொதுப் போக்குவரத்து பயன்பாட்டுக்கு மின்சார பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, மத்திய அரசு தெளிவு படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

காற்று மாசைக் கட்டுப்படுத்த, பயணிகள் போக்குவரத்துக்கு மின்சாரப் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, C.P.I.L. என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் திரு. பிரஷாந்த் பூஷண், உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார். அப்போது, மின்சார வாகனங்களை வாங்குவதற்கு மானியம் அளிப்பது, சார்ஜ் செய்வதற்கு மின்னேற்றி நிலையங்கள் அமைப்பது உள்ளிட்டவைகளை அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்தினார். அப்போது, மின்சார வாகனங்களை இயக்குவது தொடர்பாக, மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி, நீதிமன்றத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க முடியுமா? எனக் கேட்டனர். அமைச்சர், நீதிமன்றத்திற்கு நேரில் வருவதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கும் என அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்தத் திட்டம் தொடர்பாக, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00